Ticker

6/recent/ticker-posts

Ad Code



தொழிற்சாலைகளை பாதுகாக்கும் ரோபோ நாய்கள்...அதிகளவு தயாரிக்கும் பணியில் ஈடுபட பிரபல நிறுவனம் முடிவு!

இங்கிலாந்தில் கார் தயாரிப்பு ஆலையில் உயிரில்லாத காவல் நாய்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரோபோ நாய்கள் எப்படி பாதுகாக்கும்.

வளர்ப்பு நாய்கள் வாலாட்டுவது மட்டுமல்ல நாம் என்ன சொன்னாலும் கேட்கக் கூடியவை. ஆனால் இங்கிலாந்தில் கார் தயாரிக்கும் ஆலையில் சுற்றிவரும் இந்த வளர்ப்பு நாய்களும் விசுவாசத்திலும், பணிவிலும் கொஞ்சமும் குறைந்தவை அல்ல. வித்தியாசம் என்வென்றால் இவை உயிரில்லாத உலோக நாய்கள்.

இங்கிலாந்தின் Wolverhampton-இல் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தயாரிக்கும் ஆலையில்தான் காவல் பணிபுரிகின்றன இந்த ரோபோ நாய்கள். இது எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் ஆலை. இந்த ஆலையில் கண்காணிப்புக்கும், ஆய்வுக்கும் ரோபோ நாய்களை உருவாக்க பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில், தற்போது அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்று ரோபோ நாய்கள் பணியில் சேர்ந்துள்ளன.

இந்த ரோபோ நாய்களுக்கு 5 கண்கள். ஆம்… ஐந்து கேமராக்கள் இதில் இருக்கும். ஒரு பொருளை பார்த்ததுமே அதன் விவரங்களை விலாவாரியாக இதனால் ஸ்கேன் செய்து பார்க்க முடியும். இங்கு தயாராகும் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளில் உள்ள வெப்பநிலையை இந்த ரோபோ நாய் துல்லியமாக கண்காணிக்கும் என்பதால் மிகவும் உதவிகரமாக இருப்பதாக ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

ஆலைக்குள் எந்த பகுதிக்கும் ரோந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாய், தானாகவே சாவியை எடுத்து கதவைத் திறந்து எந்த அறைக்குள்ளும் நுழைய முடியும். படிக்கட்டுகளில் நாயைப் போல இறங்கி தாவிக் குதித்து செல்ல முடியும். ஆய்வில் ஏதேனும் தவறு இருந்ததை கண்டறிந்தால் அதற்கான ஒலியை எழுப்பி தொழிலாளர்களை அலர்ட் செய்யும் திறமையும் இந்த ரோபா நாய்க்கு உண்டு.

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும். 1.5 மணி நேரத்திற்கு இந்த ரோவர் எனப்படும் ரோபோ நாய் நாம் சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். இதில் உள்ள சென்சார்கள் மூலம் தான் இருக்கும் இடத்தின் வரைபடத்தை வரைந்து அதற்கு ஏற்ப செயல்பட இந்த ரோபோ நாய்க்கு திறமை உண்டு.

தற்போது 3 ஆலைகளில் பயன்படுத்தப்படும் இந்த ரோபோ நாய்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செயற்கை தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைக்கு பாதிப்பு என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது காவல் நாய்களின் வேலைக்கு கூட வேட்டு வைத்திருக்கின்றன இந்த ரோபோ நாய்கள்.

news18

Email;vettai007@yahoo.com


 



Post a Comment

0 Comments