சபாநாயகர் அசோக ரன்வெலவின்((Ashoka Ranwala) )பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய நிலையில் மேலும் ஐந்து அரசாங்க அமைச்சர்களின் கல்வித் தகுதிகள், அவர்களின் கலாநிதி பட்டங்கள் தொடர்பாக பல அரசியல் கட்சிகள் பலமாக சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்கவின்(anura karunathilake) கல்வித் தகுதி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின்(kumara jayakody) பொறியியல் பட்டம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி குறித்த தகவல்களைப் பெற முயற்சி
மேலும், அந்த அரசியல் கட்சிகள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர்களின் கல்வித் தகுதி குறித்த தகவல்களைப் பெறுவதற்காக தற்போது முயற்சி செய்து வருகின்றன.
இதனிடையே, தேசிய மக்கள் கட்சியின் சில எம்.பி.க்கள், முகநூலில் பதிவிட்ட சில கல்வித் தகுதிகளை திடீரென நீக்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீக்கப்பட்ட தகவல்கள்
எனினும், அந்த முகநூல் கணக்குகளின் HISTORY பகுதியைச் சரிபார்க்கும் போது, சில நாட்களுக்கு முன்னர் அந்த தகவல்கள் நீக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் பிரசாரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கல்வித் தகுதிகளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ibctamil
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments