அயோத்தி ராமர் கோயிலின் கைவினைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், தாஜ்மகாலைக் கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும் உ.பி. முதல்வர் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெறுகிறது. டிசம்பர் 13 தொடங்கிய கருத்தரங்கு இன்று நிறைவு பெறுகிறது. இதில் கலந்துகொண்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.
அப்போது அவர் தாஜ்மகால் மற்றும் ராமர் கோயில் கைவினைஞர்களை ஒப்பிட்டு தனது உரையில் பேசியதாவது:
இன்று இந்தியாவில் பாஜக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அனைத்துவகையானப் பாதுகாப்பும் அவர்களுக்கு அரசால் அளிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இதில் பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினைஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப்படுத்தினார். ஆனால், ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதேபோல், மிகவும் உயரியவகை துணிகளை நெய்தவர்களின் கைகளும் அக்கால ஆட்சியாளர்களால் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக இன்று அந்தவகை பாரம்பரியமிக்கக் கலாச்சாரத் துணிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. எனத் தெரிவித்தார்.
முதல்வர் யோகிக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக வரலாற்று ஆய்வாளர்கள் அவரது பேச்சுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.
முதல்வர் யோகி கூறியதை போல் தாஜ்மகாலின் கைவினைஞர்கள் கைகளை யாரும் துண்டித்ததாக வரலாறு இல்லை என மறுப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து முகலாயர்கள் மீதான வரலாற்று ஆய்விற்கு உலகப் புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைகழக வரலாற்றுதுறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அப்சல் கான் அப்படி சம்பவம் நடந்ததாக எந்த குறிப்பும் இல்லை. ஆங்கிலேயர் காலத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இது முழுக்க காழ்ப்புணர்ச்சி கொண்ட பேச்சு என்று விளக்கமளித்துள்ளார்.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments