Ticker

6/recent/ticker-posts

Ad Code



15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு


கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது

tamilmirror




Post a Comment

0 Comments