Ticker

6/recent/ticker-posts

Ad Code



வைரஸ் தொற்று பரவலை தடுக்க திருவிழா… எங்கு தெரியுமா?


தமிழகத்தில் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தங்கம்மன் கோவிலில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க விழா கொண்டாடப்படுவது பேசுபொருளாக மாறியுள்ளது.

உலக முழுவதும் பல நோய்கள் பரவி வருகின்றன. ஆனால், வெளிநாடுகளைவிட இந்தியாவில் வைரஸ் பரவுதல் மிகவும் குறைவுதான். இருப்பினும் வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்க பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுதான் வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க திருவிழா நடத்தப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? இதைப் படித்தவுடன் தயவுக்கூர்ந்து இது என்னடா மூட நம்பிக்கை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இதற்கு பின்னால் இருக்கும் விஷயங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தங்கம்மன் கோவிலில் அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூல் வழங்கப்படுகிறது. இந்தக் கூழில் சீரகம், வெங்காயம் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பச்சரிசி மாவில் ஏலக்காய், வெல்லம் சேர்க்கப்படுவது வழக்கம். பானக்கரயத்தில் ஏலக்காய், சுக்கு, மிளகு உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன.

இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்திகள் வலுபெற்று வைரஸ் பரவுதலிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

அப்படிதானே திருவிழாக்கள் உருவாகின. முன்பெல்லாம் காலரா, டைபாய்டு போன்ற வைரஸ் தொற்று பரவி வந்தன. அதிலிருந்து பாதுகாத்து கொள்ள இது போன்ற திருவிழாக்களை முன்னோர்கள் நடத்தியுள்ளனர்.

ஆரோக்கியத்திற்கு பயந்து இதுபோன்ற கூழை குடிப்பவர்களைவிட சாமிக்கு பயந்து குடிப்பவர்கள்தானே அதிகம்? மேலும் சிலர் பக்தியால் குடிப்பார்கள். எது எப்படியோ அனைவரும் இந்த கூழை குடித்துவிட்டால் எந்த நோய்தான் நெருங்கும்.

இதனை அடிப்படையாக கொண்டுதான் அங்கு திருவிழா நடத்தப்படுகிறது.

இதுகுறித்து ஒரு பக்தர் கூறியதைப் பார்ப்போம். “திருநெல்வேலி மாவட்டத்தில் சூரை திருவிழா 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த விழா தொடங்குவதற்கு முன்னர் ஊர் முழுவதும் வேப்பிலைகள் கட்டப்படும். கோவில் இருக்கும் இடத்தில் வேப்பிலையால் பந்தல் போடுவோம். தொடர்ந்து பாரம்பரிய உணவுகள் அந்த கூடாரம் எதிரே தயாரிக்கப்படும்.

அப்பொழுது சாமி ஆடுபவர்கள் ஊரைச் சுற்றி வந்து கூடாரத்தில் இருக்கும் சுவாமிக்கு அந்த உணவுகளை படைத்து வழிபடுகின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு இந்த உணவுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.” என்று பேசியிருக்கிறார்.

நமக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருமுறையும் நமது ஆரோக்கியத்திற்காகதான் திருவிழாக்களை கொண்டாடுகிறோம். ஆனால், இங்குதான் அதற்கான காரணத்தை அறிந்து கொண்டாடுகிறார்கள். ஆன்மிகமும் அறிவியலும் சேர்ந்தால், எதிர்த்து நிற்கும் அத்தனை நோய்களும் தெரித்து ஓடிவிடுமே.

kalkionline




Post a Comment

0 Comments