Ticker

6/recent/ticker-posts

Ad Code



'நிர்வாண திருமணம்' 29 தம்பதிகளும் உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல்... உறைய வைக்கும் வினோத நிகழ்வு


திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான பகுதியாகும். அதாவது திருமண வாழ்க்கை வேறு. திருமணம் நடைபெறும் அந்த தினம் என்பது வாழ்வில் மறக்க இயலாத நாளாக இருக்கும். கடந்த காலங்களில் தனிமையில் சுற்றி வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நாள். அதேபோல், இணையருடன் புதிய வாழ்வு தொடங்குவதும் அந்த நாளில்தான். இதனால்தான், அனைத்து மதங்களிலும் திருமணத்திற்கு என பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்களை வைத்திருக்கின்றன.

திருமணம் என்றாலே விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிந்து பகட்டாக வலம் வருவதுதான் என்ற புரிதல் இங்கு பலருக்கும் உள்ளது. அந்த ஒருநாள் கொண்டாட்டத்திற்கு பல லட்சம் ரூபாயை கடன் வாங்கி செலவழித்து, பல ஆண்டுகளாக அந்த கடனுக்கு வட்டி மட்டும் கட்டும் நபர்களை நீங்களும் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். எளிமையாக, எவ்வித தேவையற்ற செலவும் இன்றி திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தையும் பார்க்க முடிகிறது. அநாவசிய செலவுகள் உங்களின் எதிர்கால சேமிப்புகளை பதம்பார்க்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பொருளாதார அறிஞர்களின் அறிவுரையாக உள்ளது.

29 தம்பதிகளின் நிர்வாண தம்பதிகள் 

இந்த நிலையில், ஆடையோ, ஆபரணங்களோ இன்றி அதாவது ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் 29 தம்பதிகளும் நிர்வாணமாக திருமணம் செய்துள்ள நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைய வைத்திருக்கிறது. அதாவது, ஒருமணி நேரம் வரை நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், ஒவ்வொரு தம்பதிகளும் தங்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றனர். சொகுசு ரிசார்டில் இந்த திருமண விழா மூன்று நாள்கள் கொண்டாட்டத்துடன் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதன்முதலாக இதுபோன்று நிர்வாண திருமணம் என்பது 2003ஆம் ஆண்டு காதலர் தினம் அன்று நடந்திருக்கிறது. அப்போதிருந்து ஜமைக்காவின் Hedonism III ரிசார்டில் இந்த வினோதமான நிர்வாண திருமணத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வில் திருமண தம்பதிகள் மட்டுமின்றி திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் கூட நிர்வாண நிலையில்தான் பங்கெடுப்பார்களாம்.

திருமணத்தை நடத்திய பாதிரியார்

கடற்கரையோரம் உள்ள ரிசார்டின் முன்பக்க புல்வெளி பகுதியில்தான் இந்த நிர்வாண திருமணம் நடக்குமாம். மிகுந்த திறந்த மற்றும் சுதந்திரமான முறையில் திருமணம் செய்துகொள்ள இந்த முறையை பின்பற்றுகின்றனர். யூனிவர்சல் லைஃப் சர்ச் புளோரிடாவின் பாதிரியார் ஃபிராங்க் சர்வாசியோவின் தலைமையில் நிர்வாண திருமணம் நடைபெற்றது. மேலும் இந்த 29 தம்பதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணியை சேர்ந்தவர்கள் ஆவார். 

ரஷ்யா, செவ்விந்தியர்கள், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு சில பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிர்வாண திருமணத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த நிர்வாண திருமணம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போது சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதேபோலவே தற்போது இந்தாண்டு நிர்வாண திருமணத்தை அடுத்து அதன் புகைப்படங்கள் இணையத்தை கதிகலங்கச் செய்துள்ளனர்.

zeenews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments