Ticker

6/recent/ticker-posts

Ad Code



கமின்ஸை பறக்க விட்ட உங்களுக்கு அது நல்லாவே தெரியும்.. பும்ராவை பாராட்டிய சுந்தர் பிச்சை, எலான் மஸ்க்


பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அடுத்ததாக காபாவின் நடைபெற்ற மூன்றாவது போட்டி மழையால் டிராவில் முடிந்தது. முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு விராட் கோலி ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். 

அதனால் 3வது நாள் முடிவில் 51-4 என இந்தியா தடுமாறியது. அப்போது காபா மைதானத்தில் பேட்டிங் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஜஸ்ப்ரித் பும்ராவிடம் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் கேட்டார்கள். முழு நேர பவுலரான உங்களிடம் இப்படிக் கேட்பது சரியானது இல்லை என்றாலும் உங்களது கருத்து என்ன என்று அவரிடம் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்தவர் யார் என்று கூகுளில் தேடிப் பாருங்கள் என்று அவர்களுக்கு பும்ரா பதிலடி கொடுத்தார். அதாவது 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் ஸ்டுவர்ட் ப்ராடுக்கு எதிராக இந்தியாவின் கேப்டனாக விளையாடிய பும்ரா ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசினார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். அதைத்தான் ஆஸ்திரேலிய செய்தியாளர்களுக்கு பும்ரா பதிலடியாக கொடுத்தார். அதோடு நிற்காத அவர் 4வது நாளில் ஆகாஷ் தீப்புடன் சேர்ந்து 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 10* ரன்களை அடித்து இந்தியாவை ஃபாலோ ஆனிலிருந்து காப்பாற்றினார். மேலும் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் வீசிய பவுன்சர் பந்தை பும்ரா அற்புதமான சிக்ஸராக பறக்க விட்டார்.

இந்நிலையில் இது பற்றி கூகுள் நிறுவனத்தின் தமிழகத்தைச் சேர்ந்த தலைமை நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நான் கூகுள் செய்து பார்த்தேன். கமின்ஸ்க்கு எதிராக சிக்ஸர் அடிக்கக்கூடிய யாராக இருந்தாலும் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். வெல்டன் ஜஸ்பிரித் பும்ரா. ஆகாஷ் தீப்புடன் சேர்ந்து ஃபாலோ ஆனை காப்பாற்றி விட்டீர்கள்” என்று பாராட்டினார்.

அதை பார்த்த ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் “நைஸ்” என்று சுந்தர் பிச்சைக்கு பதிலளித்தார். அவருக்கு “ஒருநாள் வாண்ட்ரஸ் அல்லது நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா – இந்திய அணிகள் மோதும் போட்டியை பாருங்கள்” என்று சுந்தர் பிச்சை பதிலளித்தார். அந்த வகையில் எலான் மஸ்க், சுந்தர் பிச்சை வரை பும்ரா புகழ் பரவியுள்ளது.

crictamil




Post a Comment

0 Comments