Ticker

6/recent/ticker-posts

Ad Code



முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு


முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  மியன்மார் நாட்டு  பயணிகள் சுமார் 100 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது 

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து சுமார் 100 ற்கு மேற்பட்ட  பயணிகளுடன் நாட்டு படகு ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு  உணவுகள், உலருணவுகளை  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்  வழங்கியிருக்கின்றார்கள்.

அதில் சிலர்  மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

nambikkai




Post a Comment

0 Comments