டேக்வாண்டோ என்பது, 1940-1950களில் கராத்தே மற்றும் சீன தற்காப்புக் கலைகள் போன்ற கொரிய தற்காப்புக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட போர் விளையாட்டாகும்.
வீரப் பெண்மனி அப்துல் ராசிக் ஃபரீத் ஹனா மஸ்யாத் சாரா, வியட்நாமில் நடைபெற்ற ஆசிய திறந்த டேக்வாண்டோ-2024 போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை தேர்த்துள்ளார்.
29 நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்ற இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளத்திலிருந்து சென்றவராவார்.
டேக்வாண்டோ என்பது குத்துதல் மற்றும் உதைத்தல் நுட்பங்களை உள்ளடக்கிய கலை மற்றும் போர் விளையாட்டாகும்.
மரியாதை, ஒருமைப்பாடு, விடாமுயற்சி, சுயக்கட்டுப்பாடு மற்றும் அடங்காத
மனப்பான்மை ஆகிய ஐந்து கோட்பாடுகளுக்கும் மேலதிகமாக, இவ்விளையாட்டுக்கு பூம்சே, கியோருகி மற்றும் கியோக்பா போன்ற மூன்று உடல் திறன்கள் தேவை:
மனப்பான்மை ஆகிய ஐந்து கோட்பாடுகளுக்கும் மேலதிகமாக, இவ்விளையாட்டுக்கு பூம்சே, கியோருகி மற்றும் கியோக்பா போன்ற மூன்று உடல் திறன்கள் தேவை:
பூம்சே என்பது பலவிதமான உதைத்தல், குத்துதல் மற்றும் தடுப்பது போன்ற நுட்பங்களை வெளிப்படுத்தும் வடிவங்களாகும்.
கியோருகி என்பது ஒலிம்பிக்கில் காணப்படும் ஸ்பாரிங் வகையை உள்ளடக்கியதும், கியோக்பா என்பது மரப் பலகைகளை உடைக்கும் கலையுமாகும்.
டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் டோபோக் எனப்படும் சீருடையை அணிவார்கள்.
கொரியாவில் உள்ள ஒன்பது அசல் குவான்கள் அல்லது தற்காப்புக் கலைப் பள்ளிகளின் பிரதிநிதிகளின் கூட்டு முயற்சியின் மூலம், 1959ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொரியா டேக்வாண்டோ அசோசியேஷன் (KTA), டேக்வாண்டோவிற்கான பழமையான ஆளுமைக் குழுவாகும்.
இன்று டேக்வாண்டோவுக்கான முக்கிய சர்வதேச நிறுவன அமைப்புகள், சர்வதேச டேக்வான்-டோ கூட்டமைப்பு 1966ல் சோய் ஹாங்-ஹி என்பவரால் நிறுவப்பட்டது, குக்கிவான் மற்றும் உலக டேக்வாண்டோ 1972ல் நிறுவப்பட்டது.
கொரியா டேக்வாண்டோ அசோசியேஷன் மூலம் 2000ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் நிகழ்வாக நிகழ்ந்துள்ளது. 2018ல், தென் கொரிய அரசாங்கம் கொரியாவின் தேசிய தற்காப்புக் கலையாக டேக்வாண்டோவை அதிகாரப்பூர்வமாக நியமித்ததை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான தற்காப்புக்கலைப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பதக்கங்கள் வென்று வந்துள்ள மஸ்யாத் சாராவை வாழ்த்துகின்றோம்!
செம்மைத்துளியான்
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments