குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
ஆட்சியில் இருப்பவன், நாட்டு மக்களை நல்லபடி காக்காட்டா, நாட்டுல பால் வளம் குறையும். தொழில் வளம் நசிந்து போகும்.
குறள் 561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
ஒருத்தன் தப்பு செஞ்சாமுன்னா, அதை நியாயமா விசாரிச்சு, அந்த தப்பை அவன் திரும்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தபடி சரியான தண்டனை கொடுப்பது தான் ஒரு அரசாங்கத்தோட கடமை.
குறள் 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
நாட்டை ஆளுதவன் கடுமையா பேசி அட்டூழியம் பண்ணுதவன்னு மக்கள் நெனச்சுட்டா, அந்த ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்திடும்.
குறள் 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
பாக்க வருத ஆளுங்களால லேசுல பாக்கமுடியிறது இல்லை. வருகிறவங்க கிட்ட நல்லபடியா நாலு வார்த்தை பேசுதது இல்லை. இப்படிப்பட்ட ஆளுங்க கிட்ட சேர்ந்திருக்க சொத்து சுகம்லாம் பூதங்கள் கிட்ட இருக்கமாதிரி பயங்கரமா இருக்கும்.
குறள் 567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
ரொம்ப கடுமையா பேசுததும், அளவுக்கு அதிகமா தண்டனை கொடுக்கதும், ஆட்சியாளனின் வலிமையைக் மெலிய வைக்கக்கூடிய அரம் மாதிரியான ஆயுதம்.
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments