வரலாற்றில், எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட தீர்க்கதரிசிகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களின் கணிப்புகள், அவர்கள் மறைந்த பிறகும், பல காலமாக உண்மையாகி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பாபா வாங்கா மற்றும் 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸ் ஆகியோர் இத்தகைய தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர்கள். நோஸ்ட்ராடாமஸ் தனது வாழ்நாளில் வெளியிட்ட பல கணிப்புகள் இன்றுவரை பேசுபொருளாக உள்ளன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஒரு பெரிய போர் மூளும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தார். அது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்பு, நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு போர் முடிவுக்கு வரும் என்பதாகும். போரினால் ஏற்பட்ட சோர்வு மற்றும் பொருளாதார இழப்புகள் காரணமாக இரு தரப்பினரும் சமாதானத்திற்கு வரக்கூடும் என்று அவர் கூறுகிறார். இது ரஷ்யா-உக்ரைன் போர் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, 2025 ஆம் ஆண்டில் ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்பது. அவர் அதை "வானத்திலிருந்து விழும் நெருப்பு பந்து" என்று உருவகப்படுத்துகிறார். இந்த கணிப்பு உண்மையாகும்பட்சத்தில், பூமியில் பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இதுபோன்ற ஒரு நிகழ்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரேசில் நாட்டிற்கும் நோஸ்ட்ராடாமஸ் சில கடுமையான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். "உலகின் தோட்டம்" என்று அவர் வர்ணிக்கும் பிரேசில், 2025 ஆம் ஆண்டில் கடுமையான வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளை சந்திக்கும் என்று அவர் கூறுகிறார். காலநிலை மாற்றம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற காரணிகளால் பிரேசில் அழிவை சந்திக்க நேரிடும். உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளைக் கொண்ட பிரேசில், இதுபோன்ற பேரழிவுகளை சந்தித்தால், அது உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அவரது கணிப்புகளில் மிகவும் கவலை அளிப்பது இங்கிலாந்து பற்றியது. 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு போர்கள் மற்றும் ஒரு கொடிய தொற்றுநோயின் ஆண்டாக இருக்கும் என்று அவர் கணித்துள்ளார். இந்த தொற்றுநோய் போரை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பெரும்பாலும் குறியீட்டு மொழியில் எழுதப்பட்டிருப்பதால், அவற்றின் துல்லியமான அர்த்தத்தை புரிந்துகொள்வது கடினம். அவரது கணிப்புகளில் பல, பொதுவான நிகழ்வுகளைப் பற்றியவையாக இருப்பதால், அவை எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் பொருந்தக்கூடும் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, போர், நோய், இயற்கை பேரழிவுகள் போன்றவை வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சம்பவங்கள். இருப்பினும், நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் மிகவும் துல்லியமாக இருந்ததாக நம்பப்படுகிறது. இதுவே அவரை ஒரு மர்மமான மற்றும் பிரபலமான தீர்க்கதரிசியாக நிலைநிறுத்தியுள்ளது.
நோஸ்ட்ராடாமஸின் 2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எது எப்படியிருப்பினும், காலம்தான் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும்.
kalkionline
0 Comments