Ticker

6/recent/ticker-posts

Ad Code

423 ரன்ஸ்.. விடைபெற்ற ஜாம்பவான் சௌதீ.. இங்கிலாந்தை நொறுக்கிய நியூஸிலாந்து மாபெரும் சாதனை வெற்றி


நியூசிலாந்து மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹமில்டன் நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 347 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 76, டாம் லாதம் 63 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக மேத்தியூ போட்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய இங்கிலாந்தை அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்து 143க்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 32 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 453 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 156, டேரில் மிட்சேல் 60, வில் எங் 60 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் பேத்தல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 658 ரன்களை துரத்திய இங்கிலாந்து மீண்டும் சுமாராக விளையாடி 234க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 54, ஜேக்கப் பேத்தல் 76 ரன்கள் எடுத்த நிலையில் நியூஸிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 423 ரன்கள் வென்ற நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் வித்தியாசத்தில் தங்களுடைய மிகப்பெரிய சாதனை வெற்றியை சமன் செய்தது. இதற்கு முன் 2018ஆம் ஆண்டு கிறிஸ்சர்ச் நகரில் இலங்கைக்கு எதிராகவும் அந்த அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த வகையில் 2 – 1 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றாலும் நியூசிலாந்து ஒயிட் வாஸ் தோல்வியை தவிர்த்தது. இந்தப் போட்டியுடன் நியூசிலாந்தின் ஜாம்பவான் டிம் சௌதீ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். 2008இல் அறிமுகமான அவர் 107 போட்டிகளில் 391 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக ரிச்சர்ட் ஹாட்லிக்கு பின் அதிக விக்கெட்கள் எடுத்த நியூசிலாந்து வீரரான அவர் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரெண்டன் மெக்கல்லமுக்கு (107) பின் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்து வீரராகவும் (98) அவர் சாதனை படைத்துள்ளார். இருப்பினும் தற்போது 36 வயதாகும் அவர் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு பிரியா மனதுடன் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சொந்த ஊரில் ஓய்வு பெற்றார். அவருக்கு ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லி சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்த நிலையில் நியூசிலாந்து வீரர்களும் ரசிகர்களும் பிரியாத மனதுடன் விடை கொடுத்தனர்.

crictamil


Post a Comment

0 Comments