அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதாக செய்தி வெளியிட்ட ஏபிசி நியூஸ் என்ற ஆஸ்திரேலிய செய்தித் தொலைக்காட்சி அமெரிக்க அதிபரின் ஆவணக் காப்பகத்துக்கு 15 மில்லியன் டாலர்களை அந்த தொலைக்காட்சி சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டது.
2023ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் எழுத்தாளர் எலிசபெத் ஜீன் கரோல் தொடுத்த வழக்கில், தன்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த வழக்கில் டிரம்ப்பை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், அந்தத் தீர்ப்பில் அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் டிரம்ப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்று ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தவறான செய்தி வெளியிட்டதாக டிரம்ப் தொடுத்த வழக்கில் ஏபிசி நியூஸ் தொலைக்காட்சி அமெரிக்க அதிபரின் ஆவணக்காப்பகத்துக்கு 15 மில்லியன் டாலர்களை வழங்கி, பொது மன்னிப்பை வெளியிட சமரசம் செய்து கொண்டது.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments