பார்ல் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20 மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இது டி20 தொடரை தென்னாபிரிக்க அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் பார்ல் நகரில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சல்மான் ஆகா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா முன் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் ஹென்றிச் கிளாசன் மட்டும் அதிரடியாக விளையாடி 97 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. சல்மான் ஆகா நான்கு விக்கெட்களும் அப்ரார் அகமது இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய 22 வயதான சையும் ஆயுப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு முனையில் சையூப் அயூப் அதிரடி காட்ட மறுமுனையில் அப்துல்லா ஷபிக் டக் அவுட்டாகியும் கேப்டன் ரிஸ்வான் 1 ரன்னிலும், கம்ரான் குலாம் 4 ரன்களிலும், இர்பான் கான் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் 60 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.
அப்போது ஷையும் அயூப்,சல்மான் ஆகா ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடி தென்னாப்பிரிக்காவிடமிருந்து வெற்றியை கவர்ந்து கொண்டு சென்றது. இந்த சூழலில் சையும் அயூப் 109 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், மூன்று சிக்ச்ர்களும் அடங்கும்.இதனால் ஆட்டத்தில் மீண்டும் திருப்புமுனை ஏற்பட்டது.
ஒரு ரன்னில் இர்பான் கான் ஆட்டமிழக்க, ஷாகின் ஆப்ரிடி டக் அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சால்மன் ஆகா மட்டும் கடைசி வரை நின்று பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் மூன்று பந்துகள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. சல்மான் ஆகா 82 ரன்களுடன் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.
mykhel
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments