
கடந்த 9 ஆம் தேதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக இதனைத் தெரிவித்தார்.
17 இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் சுமார் 440 மெட்ரிக் டன் அரிசி உள்ளதாகவும் அதில் 130 மெட்ரிக் டன் பச்சை அரிசியும் 300 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிசியை சுங்கத்தில் இருந்து விரைவில் அகற்றி பொதுமக்களுக்கு வழங்கும் விசேட வேலைத் திட்டமொன்றை இலங்கை சுங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக தெரிவித்தார்.
nambikkai


0 Comments