Ticker

6/recent/ticker-posts

Ad Code



குகையில் விழுந்த இத்தாலியப் பெண், 75 மணி நேரம் நீடித்த மீட்புப்பணி


இத்தாலியின் பேர்கமோ (Bergamo) பகுதியில் உள்ள குகையில் விழுந்த பெண், 75 மணி நேரம் இடைவிடாது நீடித்த மீட்புப்பணிக்குப் பின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் கடந்த சனிக்கிழமை (14 டிசம்பர்) நடந்தது.

32 வயதுக் குகை ஆய்வாளரான ஒட்டாவியா பியாணா (Ottavia Piana) அந்தக் குகைப் பகுதியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் காலுக்கு அடியிலிருந்த கல் நழுவியதால் அவர் ஐந்திலிருந்து ஆறு மீட்டர் தூரம் வரை குகையில் விழுந்தார்.

அதனால் அவரது முதுகுத்தண்டு, விலா எலும்புகள், முகம், முட்டி எனப் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மீட்புப் பணியில் மொத்தம் 159 தொண்டூழியர்கள் ஈடுப்பட்டனர்.

குளிர்ந்த காற்று வீசியதாலும், பியாணாவிற்கு ஏற்பட்ட கடுமையான காயங்களாலும் அவரை விரைவாக வெளியேற்றப் போரடியதாக மீட்புக் குழுவினர் கூறினர்.

அனுபவம் வாய்ந்த ஆய்வாளராகக் கருதப்படும் பியாணா கடந்த 17 மாதங்களில் இரண்டாம் முறையாகக் குகையில் விழுந்துள்ளதாய் கூறப்படுகிறது.

seithi



Post a Comment

0 Comments