Ticker

6/recent/ticker-posts

Ad Code



75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டாமா? மத்திய அரசு விளக்கம்!


சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு போலி செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எனினும் இது போன்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகமான PIB அவ்வப்போது மக்களை எச்சரித்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது இணையத்தில் மற்றொரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.

அந்த செய்தியில் "மத்திய அரசின் பெரிய அறிவிப்பு - இவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் “இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் மற்றும் பிற திட்டங்களின் வருமானத்தில் வாழ்கின்றனர். இருப்பினும், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, மூத்த குடிமக்கள் இனி தங்கள் வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை, மேலும் அவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

“மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த தகவலின்படி, மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் அரசாங்கம் சட்டத்தை மாற்றியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இது ஒரு போலியான செய்தி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. PIB தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற செய்தி போலியானது.

ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டுமே உள்ள 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஐடிஆர் (பிரிவு 194P இன் படி) தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்பதை PIB மேலும் தெளிவுபடுத்துகிறது. வரிகள், பொருந்தினால், வருமானம் மற்றும் தகுதியான விலக்குகளைக் கணக்கிட்ட பிறகு, குறிப்பிட்ட வங்கியால் கழிக்கப்படும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

asianetnews




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments