மூன்றாம் உலகப்போர் நடைபெற்றால் நிலைமை என்னவாகும் என்பது குறித்து பிரபல நபர் ஒருவர் கூறியுள்ள கருத்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரினால் ஏற்படும் ஆபத்துக்களை உலகம் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது.
அடுத்த ஒரு போர் வேண்டாம் என்பதுதான் உலக நாடுகளின் எண்ணமாக இருக்கிறது. இருப்பினும் தவிர்க்க முடியாத சூழலில் போர் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் நிலைமை மிக மோசமானதாக இருக்கக் கூடும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பிஷப் மாரி இம்மானுவேல், மூன்றாம் உலகப்போர் குறித்து தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிஷப் இம்மானுவேல் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மூன்றாம் உலகப் போர் நடைபெற்றால் அதில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்து விடுவார்கள். உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் நாம் ஏன் பிறந்தோம் என்று கூறும் அளவுக்கு அவர்களுக்கு துயரங்கள் இருக்கும். அணு ஆயுதங்கள் வெறுமனே கண்காட்சிக்காக உருவாக்கப்படவில்லை. அவை மனித வரலாற்றில் மிகவும பேரழிவை தரும் ஆயுதங்கள். என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் நிறுவனம், அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த சூழலில் பிஷப் மாரி இம்மானுவேல் வெளியிட்டுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இப்படி ஒரு பயங்கரமான கணிப்பு கூறப்படுவது இது முதல் முறையல்ல. புகழ்பெற்ற துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற பாபா வங்கா மற்றும் நோஸ்ட்ராடாமஸ் போன்ற புகழ்பெற்ற நபர்கள் பெரிய உலக நாடுகளின் மோதல்களையும் அவை கொண்டு வரும் அழிவையும் முன்னறிவித்துள்ளனர். தற்போதைய உலகளாவிய பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்த கணிப்புகள் இப்போது இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
news18
Email;vettai007@yahoo.com
0 Comments