Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிகை அலங்காரத்துக்கு அழைத்துச் செல்லாத தந்தை - ரசாயனம் ஊற்றி எரித்த மகள்


அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் சிகை அலங்காரத்திற்குக் காரில் அழைத்துச் செல்லாத தந்தையை ரசாயனம் ஊற்றி எரித்த மகளுக்குக் கடுமையான தண்டனை அளிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு (2023) 21 வயது மேகன் இமிரோவிக்ஸிற்கு (Megan Imirowicz) ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அவர் ஏற்கனவே 17 மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்ததால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

மேகனின் வயது, பக்குவமின்மையைக் காரணம் காட்டி மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

சம்பவம் நடந்தபோது மேகனுக்கு 17 வயது.

மேகன் தமது 18ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குமுன் சிகையை அலங்கரிக்கத் திட்டமிட்டிருந்தார்.

அவரின் 64 வயதுத் தந்தை கோன்ரட் இமிரோவிக்ஸ் (Konrad Imirowicz) மது போதையில் இருந்ததால் மேகனைச் சிகை அலங்காரத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

கோபத்தில் தந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது மேகன் அவர் மீது lye எனும் ரசாயனத்தை ஊற்றினார்.

கோன்ரட் உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

ஐந்து மாதங்கள் கழித்து அவர் மாண்டார்.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments