Ticker

6/recent/ticker-posts

சர்வதேச தேநீர் தினம் இன்றாகும்!


இன்றும் உலகளாவிய அளவில் பரவலாகப் புகழ்பெற்றுள்ள இலங்கைத் தேயிலை, ஸ்கொட்லாந்து தோட்டக்காரரான ஜேம்ஸ் டேலர் என்பவரின் புதுமை மற்றும் பொறுமையால் உருவாக்கப்பட்ட பெருமைமிக்க ஒன்றாகும். 

1852ல் இலங்கைக்கு வந்த இவர், 1867ல் கண்டிக்கு அருகிலுள்ள லூல்கொண்டெரா எஸ்டேட்டில் முதல் 19 ஏக்கர் தேயிலை தோட்டத்தை உருவாக்கினார்.

இந்தியாவின் அசாமிலிருந்து விதைகள் இறக்குமதி செய்து, அதனை நட்டி வளர்த்து, புதிய முறைகளைப் பரிசோதித்தார். அவரது எளிய முறைகளான, கையால் இலைகளை உருட்டுதல் மற்றும் கிளே அடுப்புகளில் உலர்த்துதல் ஆகியவையாகும், இதுவே இன்றைய உலகப்புகழ் பெற்ற தேயிலை தொழில்துறையின் அடிப்படையாக அமைந்தது எனலாம். 

தன் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகள் மூலம் டேலர் தயாரித்த முதல் தேயிலை, அதன் தனித்துவமான மணம் மற்றும் சுவைக்காக சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

டேலரின் பரிசோதனைகள் வெற்றிகரமாக திகழ்ந்தவுடன், அவரது வாஸஸ்தளம் இலங்கையின் முதல் தேயிலை தொழிற்சாலையாக மாறியது.

மிஸ்டர் நோபல் என்ற தோட்டக்காரரின் உதவியுடன், இலைகளை திருத்துதல், உலர்த்துதல் மற்றும் உருட்டுதல் ஆகிய முறைகளை மேம்படுத்தினார். 

டேலரின்  உற்சாகமும் உழைப்பும், இலங்கை தேயிலையை உலகின் முன்னணி தேயிலையாக மாற்றியது.

1867ம் ஆண்டு ஆரம்பமான இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில்  இன்றுவரை  வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயரால்  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர்.
200 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக  வியர்வை சிந்தி மலைக்காடுகளை செல்வம் கொழிக்கும் பூமிகளாக மாற்றிய பெருமை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சாரும். அவர்கள் இலங்கையின் பொரு­ளா­தா­ர வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பிற்காக எப்போதும் கௌர­விக்கப்பட வேண்டியவர்கள்!

இலங்கையிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர், தேயிலைத் தொழிற்றுறையினூடாகப் பெருந்தொகையான அந்நியச் செலாவணியை இலங்கைக்கு ஈட்டித் தருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்; அது வருடமொன்றிற்கு 1.3 பில்லியன் டொலர்களையும் தாண்டியதாகும்!

இன்றைய தேயிலை தினத்தில் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் ஜேமஸ் டேலரும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுமே!

செம்மைத்துளியான்


Post a Comment

0 Comments