
பேங்காக் :பத்தாயாவில் , பணியிடத்தில் ஏற்பட்ட சண்டையில் தனது கணவரின் முகத்தை கத்தியால் சரமாரியாகக் கீறிய மனைவியின் செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
வீடு திரும்ப மறுத்ததால் , கணவரது மேல் கோவம் கொண்டு இவ்வாறு தாக்கியுள்ளதாக டைகர் செய்தி தளம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் மூக்கு உட்பட முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் மீட்புக்குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், போலீசார் வந்தவுடன் மனைவி வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார் . தகராறு ஏற்படுவதற்கு முன்பு, அந்தப் பெண் தனது கணவரைச் சந்திப்பதற்காக கட்டுமானப் பகுதியின் நுழைவாயிலில் தனது வாகனத்தை நிறுத்தினார் என்று கூறப்படுகின்றது.
பின்பு பாதிக்கப்பட்டவர், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்னதாக நண்பர்களுடன் மது அருந்தியபோது மோதல் ஏற்பட்டது என்று சாட்சி கூறினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments