
ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் அசுத்தமான நீரில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசுத்தமான நீரினால்தான் ஏராளமான நோய்கள் வரும். கொசுக்கள் தங்கி பல நோய்களை மனிதர்களுக்குத் தரும். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மக்களுக்கு அதிகம் ஏற்பட அசுத்தமான நீரே காரணம். ஆகையால் தான் உலகம் முழுவதும் சுத்தமான நீரினை பயன்படுத்தவும், அசுத்தமான நீரினை அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக பஞ்சம் ஏற்படும் நாடுகளில் அசுத்தமான நீரையே மக்கள் அருந்தும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் கொத்து கொத்தாக சாகும் நிலை கூட வரும். பஞ்சத்தினாலும் நோய் வாய்ப்பட்டு இறக்க நேரிடும்.
அந்தவகையில் தற்போது அசுத்தமான நீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போலியோ வைரஸால் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டனர். பிற்பாடு பல முயற்சிகள் எடுத்து அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தினர். இன்றளவும் கூட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவற்றை கொடுப்பதைப் பார்க்க முடியும்.
உலகம் முழுவதும் போலியோ வைரஸ் இருப்பை ஒழிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் 1988 ஆம் ஆண்டு முதல் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது .
உலகில் இரண்டு நாடுகளில் மட்டுமே போலியோ வைரஸ் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் இன்னும் போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாத தலைமுறைக்கு போலியோ வைரசால் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் வீணாக்கப்பட்ட நீரில் போலியோ வைரஸ் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்துவதன்மூலம் மீண்டும் போலியோ வைரஸ் மக்களை பாதிக்கும்.
இதனால், அந்த நீர்களை உடனே அப்புறப்படுத்தவும், சுத்தமான நீரினை பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் உடனே போலியோ தடுப்பு மருந்துகளை மக்களுக்கு உபயோகம் செய்யக்கோரியும் கூறப்பட்டுள்ளது.
போலியோ வைரஸ் இருக்கும் நாடுகளிடையே வைரஸை ஒழிக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments