Ticker

6/recent/ticker-posts

Ad Code



தகாத உறவு.. கணவனை கொல்ல கூலிப்படை - நகையை அடமானம் வைத்த மனைவி!


கணவனை கொல்ல மனைவியே கூலிப்படை ஏவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காசிக்கவுண்டன் புதுார், தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45). கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த வாரம் இப்பகுதியில் வாக்கிங் சென்றிருக்கிறார்.

அப்போது, ரமேஷ் ஐந்துக்கும் மேற்பட்டோர் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொன்றனர். இந்த கொடூர தாக்குதலில் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதை பற்றி தகவலறிந்து வந்த போலீசார் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அழைத்துச் செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் காரில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அதன் பேரில் கூலிப்படையினர் திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் கோபால கிருஷ்ணன் (35), மன்னார்குடி அஜித் (27), சிம்பு (23), சரண் (24), தேனி மாவட்டம் சில்லுவார்பட்டி ஜெயப்பிரகாஷ் (45) ஆகிய 5 பேரை கடந்த 4 ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரமேஷ் மனைவிக்கு இந்த கொலையில் பங்குண்டு என தெரியவந்தது. அதாவது, கொலையான ரமேஷ் மனைவி விஜயலட்சுமிக்கும் அவினாசி காசிக்கவுண்டன்புதூரை சேர்ந்த சையது இர்பான் (28) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

இவர்கள் இருவரும் வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (27) என்பவர் மூலம் கூலிப்படையினரை ஏவி ரமேஷை கொலை செய்ததாக தெரியவந்தது. இந்த நிலையில் விஜயசட்சுமி போலீசாரிடம் கூறியதாவது,

ரமேஷின் வீடு இருக்கும் பகுதிக்கு அருகே சையது இர்பான், சிப்ஸ் கடை நடத்தி வந்தார். விஜயலட்சுமியுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டதாம். அதே வேளையில் கணவர் ரமேஷுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் ரமேஷ் மதுபானம் குடித்துவிட்டு வந்து விஜயலட்சுமியை செக்ஸ் டார்ச்சர் செய்து அடித்து துன்புறுத்தி வந்தாராம். இதை விஜயலட்சுமி தனது கள்ளக்காதலன் இர்பானிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கணவரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என அவரிடம் தெரிவித்தையடுத்து, கொலை நடந்துள்ளது.  

ibctamilnadu



 Ai SONGS

 



Post a Comment

0 Comments