Ticker

6/recent/ticker-posts

எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முட்டை கைமா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க


பொதுவாகவே மலிவான விலையில் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்றால் அது நிச்சயம் முட்டையாகத்தான் இருக்கும்.

முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை கொடுக்கின்றது.

கூந்தல் வளர்ச்சி தொடக்கம் இதய ஆரோக்கியம் வரையில் பல்வேறு வகையிலும் முட்டை உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 

இவ்வளவு ஊட்டச்சத்துகள் நிறைந்த முட்டையை வைத்து அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு முட்டை கைமா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையானப் பொருட்கள்

வேகவைத்த முட்டை - 4 

எண்ணெய் - 2 தே.கரண்டி

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 1

சீரகம் - 1/2 தே.கரண்டி

கிராம்பு - 3 

பட்டை - 1 

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

நறுக்கிய வெங்காயம் - 1 கப் 

நறுக்கிய தக்காளி - 1 

நறுக்கிய பச்சை மிளகாய் - 2 

இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லி தூள் - அரை தே.கரண்டி 

வேகவைத்த பட்டாணி - அரை கப் 

கொத்தமல்லி - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

முதலில் முட்டைகளை வேகவைத்து ஆறியதும் விரும்பிய வகையில் நறுக்கியோ அல்லது கேரட் போல துருவியோ தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிசூடானதும், அதில் கிராம்பு, ஏலக்காய், சீரகம், பட்டை மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி,  நறுக்கிய தக்காளியையும் போட்டு மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் வேகவைத்த பட்டாணி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு குழம்பு கெட்டியாகும் வரையில் கொதிக்கவிட வேண்டும். 

கிரேவி கெட்யாகும் போது அதில் துருவிய முட்டையை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். இறுதியில் மல்லியிலை மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முட்டை கைமா தயார். 

manithan


 



Post a Comment

0 Comments