தனது கணவனின் தகாத உறவு தொடர்பாக தெரியவந்ததையடுத்து அற்புதமான தண்டனை கொடுத்த மனைவி ஒருவர் பற்றிய செய்தி சமீபத்தில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பதிவாகியுள்ளது.
கணவருக்கு இரண்டு வருடங்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, “ எனக்கு இரண்டு வருடங்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அது எப்படி இருந்தது என்று என்னிடம் கேளுங்கள்" என எழுதிய பதாகையொன்றை கணவனின் கழுத்தில் மாட்டி விட்டு நியூயோர்க் நகரில் உள்ள வால்ட் வைட்மேன் என்ற வணிக வளாகத்தில் நடக்க வைத்துள்ளார்.
அத்துடன் அப்பெண்ணும் “ இந்த மனிதனுக்கு இரண்டு வருடங்களாக தகாத உறவு இருந்துள்ளது என கூச்சலிட்டுக்கொண்டு முன்பாக நடந்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும், குறித்த பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன் பலரும் இந்த தண்டனையை விமர்சித்துள்ளனர்
tamilmirror
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments