Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாலஸ்தீன கைப்பையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பிரியங்கா: பாஜக எதிர்ப்பு


பாலஸ்தீனம் என பெயரிடப்பட்ட கைப்பையுடன் நாடாளுன்றத்துக்கு பிரியங்கா காந்தி வந்தார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரியங்காவுக்கு ஆதரவாக அவையில் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

வயநாடு தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பிரியங்கா காந்தியை நேரில் அழைத்து தில்லியில் உள்ள பாலஸ்தீன தூதரக பொறுப்பு அதிகாரி அபு ஜசீர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பது போன்ற கைப்பையுடன் மக்களவைக்கு பிரியங்கா காந்தி வந்தார்.

காஸாவில் படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என எக்ஸ் வலைதளத்தில் பிரியங்கா காந்தி பதிவிட்டிருந்தார்.

பாஜகவினர் தனது பாலஸ்தீன கைப்பைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜகவினருக்கு பதிலளித்த பிரியங்கா, நான் என்ன உடை அணிய வேண்டும் என்று யார் முடிவு செய்வது?  நான் விரும்பியதை அணிவேன் என்றார்.

முன்னதாக,  வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nambikkai



Post a Comment

0 Comments