2030, 2034 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடாத்தும் நாடுகளை FIFA அறிவித்துள்ளது.
2030 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோவும், 2034 உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டியை ஸவூதி அரேபியாவும் நடத்தவுள்ளன.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நாட்டின் உலகக் கோப்பை கனவு நனவானது என்றும் போர்ச்சுகல் 2030 உலகக் கோப்பையை நடத்துவதில் பெருமைப்படுவதாகவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
2034 உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டி
ஸவூதி அரேபியாவின் அல்-கோபாரில் அமைந்துள்ள அரம்கோ ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, சூரிச்சில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் பின், தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிவித்தார்.
அரம்கோ அதிநவீன ஸ்டேடியம், கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்குமென எதிர்பார்க்கப் படுகின்றது.
பாலைவனத்தின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தின் கட்டிடக்கலையின் உச்சத்தை தொடும் சிறந்த ஒலி - ஒளி அமைப்புகளை கால்பந்து இரசிகர்ளுக்கு வழங்கும்.
2002ல் ஜப்பான், கொரியா மற்றும் 2022ல் கத்தாருக்குப் பிறகு, ஆசியாவில் நடாத்தப்படும் நான்காவது போட்டியாகவும், பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் அரேபிய தீபகற்பத்தினுள் நடைபெறப்போகும் இரண்டாவது உலகக் கோப்பைப் போட்டியாகவும் இது அமையவுள்ளது.
2030ல் நடைபெறுவது 24வது FIFA உலகக் கோப்பைக்கான போட்டி; உறுப்பினர் சங்கங்களின் ஆண்கள் தேசிய அணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தும் இந்த சர்வதேச கால்பந்துப் போட்டிகள் ஜூன் 8 முதல் ஜூலை 21, 2030 வரை நடைபெறும்.
முதன்முறையாக இரண்டு கண்டங்களிலிருந்து ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ என்ற மூன்று நாடுகள் போட்டியை நடாத்துகின்றன.
இது 1978க்குப் பிறகு அர்ஜென்டினாவில் முதல் முறை நடைபெறுவதாகும். 1982க்குப் பிறகு ஸ்பெயினில் முதன் முதலாக நடாத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது!
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments