Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்த சான்ஸ் கொடுக்காததால் அஸ்வின் குட் பை சொல்லிட்டாரு.. ஓய்வுக்கான காரணம் பற்றி ரோஹித்


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 775 விக்கெட்டுகள் எடுத்து நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வின்னரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்காக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இவ்வளவு விக்கெட்டுகள் எடுத்து நம்பர் ஒன் பவுலராக செயல்பட்டும் வெளிநாடுகளில் அஸ்வினுக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமலேயே இருந்து வந்தது. அந்த வரிசையில் இத்தொடரின் முதல் போட்டியிலும் ரோஹித் இல்லாத நேரத்தில் கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டு வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்தார். அதனாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியின் முடிவிலேயே தம்மிடம் ஓய்வு பற்றி அஸ்வின் சொன்னதாக ரோஹித் கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்திய தாம் இரண்டாவது போட்டியில் விளையாட வைத்ததாக தெரிவிக்கும் ரோஹித் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பெர்த் நகருக்கு வந்த போது அஸ்வின் இந்த முடிவில் உறுதியாக இருந்தார். அப்போட்டியில் முதல் 3 – 4 நாட்கள் நான் இந்திய கிரிக்கெட் அணியில் இல்லை”

“அப்போது இது தான் அவரது மனதில் இருந்தது. அதற்குப் பின்னணியில் நிறைய விஷயங்கள் இருந்தன. இது பற்றிய தெளிவான விளக்கங்களை அஸ்வின் தன்னுடைய இடத்தில் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இந்திய அணி என்ன சிந்திக்கிறது எந்த கலவையை விரும்புகிறது என்பதை அஸ்வின் புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எந்த ஸ்பின்னர் விளையாடுவார் என்பது சூழ்நிலை காரணமாக எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை”

“அதனால் மைதானத்தை பார்த்த பின்பே முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் பெர்த் நகருக்கு வந்ததும் இதைத்தான் நாங்கள் பேசினோம். எப்படியோ நான் அவரை சமாதிக்க வைத்து இரண்டாவது போட்டியில் விளையாட இருக்குமாறு வைத்தேன். அனேகமாக இந்தத் தொடருக்கு தேவைப்படாத நான் வெளியே செல்வதே சிறந்த வழி என்று அஸ்வின் உணர்ந்திருக்கலாம்”

“அதனால் கிரிக்கெட்டுக்கு அவர் குட் பை சொல்லியிருக்கலாம். அடுத்தப் போட்டியில் எந்த ஸ்பின்னர் தேவை என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் அஸ்வின் எடுக்கும் முடிவுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவசியம்” என்று கூறினார். இதிலிருந்து அஸ்வின் ஓய்வு பெற புதிய பயிற்சியாளர் கம்பீர் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது.

crictamil



Post a Comment

0 Comments