Ticker

6/recent/ticker-posts

நட்பு நாடு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது ஸ்விட்சர்லாந்து


நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை ஸ்விட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால்இந்திய நிறுவனங்கள் அந்நாட்டில் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பதிலடியாக அந்நாடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

விருப்பத்துக்குரிய நட்பு நாடு என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதால் வரி தொடர்பான ஒப்பந்தங்களும் ரத்தாகின்றன என்று அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் ஈட்டும் ஈவுத் தொகைக்கும் 10 சதவீதம் வரி செலுத்த  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

nambikkai


HOME

Post a Comment

0 Comments