
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சேகர் குமார் யாதவ். இவர், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களை பரப்பி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்று, இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டத்தில் நீதிபதி சேகர் குமார் யாதவ், பேசிய கருத்துக்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”நம்முடைய குழந்தைகள் சிறு வயதிலேயே வேதங்கள் படித்து, ஸ்லோகங்கள் சொல்லி அகிம்சை முறையில் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகள், கசாப்புக் கடைகளில் விலங்குகள் வெட்டப்படுவதை பார்த்து வளருகின்றனர். அவர்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பார்களேன நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?.
இது இந்துஸ்தான். இங்கு வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். பசு, கீதை மற்றும் கங்கை ஆகியவை கலாச்சாரத்தை வரையறுக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஹர்பலா தேவியின் சிலை உள்ளது, ஒவ்வொரு குழந்தையும் ராமர் - அதுதான் எனது நாடு"என்று கூறினார்.
இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இவருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதோடு உச்சநீதிமன்ற கொலிஜியமும் சேகர் குமார் யாதவ் தனது பேச்சு குறித்து நேரில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி சேகர் குமார் யாதவ் கொலிஜியமில் நேரில் ஆஜராகி தனது கருத்து குறித்து விளக்கமளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற கொலிஜியம், சேகர் குமார் விளக்கத்தை ஏற்க மறுத்து அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு, அந்த உயர் பதவியின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கொலிஜியம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும், அரசமைப்புச் சட்டப் பதவியை கௌரவமாக பேண வேண்டும்என்றும் பொது இடங்களில் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
kalaignarseithigal

கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments