Ticker

6/recent/ticker-posts

Ad Code



TikTok-க்கு ஒரு வாய்ப்பு வழங்கவிருக்கும் அமெரிக்க உயர் நீதிமன்றம்


TikTok தளத்தின் கோரிக்கையைக் கேட்க அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

TikTok உரிமையாளரான ByteDance நிறுவனம், அடுத்த மாதம் (ஜனவரி) 19ஆம் தேதிக்குள் செயலியைத் தடை செய்யவேண்டும் எனும் சட்டத்தை நிறுத்திவைக்கும்படி TikTok கேட்டுக்கொண்டது.

TikTok, ByteDance ஆகியவற்றின் அவசரக் கோரிக்கையைக் கேட்டு நீதிபதிகள் உடனடியாகத் தீர்ப்பளிக்கவில்லை.

அடுத்த மாதம் (ஜனவரி) 10ஆம் தேதி நிறுவனம் தரப்பு வாதத்தைக் கேட்கப்படும்.

அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

சீனநிறுவனம் TikTok அமெரிக்க வாடிக்கையாளர்களைப் பற்றி தகவல்களைச் சேகரிப்பதாக அமெரிக்க அஞ்சுகிறது.

ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் TikTok இயங்குவதில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது.

seithi



Post a Comment

0 Comments