Ticker

6/recent/ticker-posts

Ad Code



களவாடப்பட்ட பொருள்களைப் பெற சிங்கப்பூருக்கு வந்த ஆடவருக்கு 7 மாதச் சிறைத் தண்டனை


திருடப்பட்ட சொகுசுப் பொருள்களுடனும் ரொக்கத்துடனும் பிடிபட்ட ஆடவருக்குச் சிங்கப்பூரில் 7 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த 28 வயது வு ஜின்சிங்கிடம் சுமார் 500,000 வெள்ளி மதிப்பிலான பொருள்களும் ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தனியார் வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களுக்கும் வு ஜின்சிங், வு ஜியென்சின் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.

அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்த கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

ஜுலை 27ஆம் தேதி வு ஜியென்சின்,  ஒரு நாளுக்கு மட்டும் சிங்கப்பூருக்குச் சென்று களவாடப்பட்ட கைப்பையையும் கடிகாரத்தையும் பெற்று வரும்படி கூறியிருக்கிறார்.

சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவது வு ஜின்சிங்கிற்குத் தெரிந்திருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கூறினார்.

nambikkai


Post a Comment

0 Comments