
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் ஜோர்ஜியாவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இயற்கை மரணம் அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 100 வயதான ஜிம்மி கார்டரின் மறைவு அமெரிக்க மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்மி கார்டர் தனது அரசியல் வாழ்க்கையில் சிறந்த மனிதராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.நோபல் பரிசுப் பெற்றவர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏனையவர்களுக்கு கொடுப்பதற்காகவே ஜிம்மி கார்டர் வாழ்ந்தார் என முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜிம்மி கார்டரின் மறைவு குறித்த கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய ஜிம்மி கார்டர் 1977 முதல் 1981ம் ஆண்டு வரை பதவி வகித்தார். ஒரு முறை மாத்திரமே அவர் ஜனாதிபதியாக ஆட்சி செய்தார். சில நோய் நிலைமைகள் காரணமாக கடந்த ஆண்டு முதல் வீட்டிலிருந்தே சிகிச்சைகளுக்கு உட்பட்ட ஜிம்மி கார்டர் நேற்று தனது 100வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்காவின் Empire கட்டிடம் சிவப்பு, வெள்ளை. நீல நிறங்களில் ஒளியேற்றப்பட்டது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments