வாட்ஸ்அப் உடனடி மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்
வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உடனடி மொழிபெயர்ப்பு அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது உலகளாவிய தகவல் தொடர்பை புரட்சிகரமாக்க உறுதுணையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்த முன்னோடி புதுப்பித்தல், பயனர்கள் பேசும் மொழியை பொருட்படுத்தாமல், எவரிடமும் தடையின்றி உரையாட அனுமதிக்கும்.
மேலும், முழுமையான குறியாக்கம் (end-to-end encryption) மூலம், செய்தி உள்ளடக்கம் பாதுகாப்பானதாகவும் ரகசியமானதாகவும் இருப்பதை வாட்ஸ்அப் உறுதி செய்கிறது.
கிளவுட் சர்வர்களை நம்பியிருக்கும் பாரம்பரிய மொழிபெயர்ப்பு முறைகளுடன் ஒப்பிடுகையில், வாட்ஸ்அப்பின் மொழிபெயர்ப்பு பயனர்களின் சாதனங்களில் உள்ளூர் ரீதியாக சேமிக்கப்பட்ட மொழி தொகுப்புகளால் இயக்கப்படும்.
இதன் ஆஃப்லைன் திறன், இணைய இணைப்பு இல்லாமல் கூட பயனர்கள் செய்திகளை மொழிபெயர்க்க உதவுகிறது.
இது எவ்வாறு செயல்படுகிறது?
இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் மொழிபெயர்க்க விரும்பும் மொழிகளுக்கான மொழி தொகுப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
நிறுவப்பட்டவுடன், வாட்ஸ்அப் தானாகவே வரும் செய்திகளின் மொழியை கண்டறிந்து பயனரின் விருப்பத்திற்கேற்ப மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை வழங்கும்.
பயனர்கள் தனிப்பட்ட செய்திகளை மொழிபெயர்க்கவோ அல்லது முழு உரையாடலுக்கும் உடனடி மொழிபெயர்ப்பை இயக்கவோ இதனை தேர்வு செய்யலாம்.
வாட்ஸ்அப் விரைவில் பீட்டா சோதனையில் இந்த மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகு, இந்த அம்சம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
lankasri
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments