ஈரானின் தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆடை தொடர்பிலான சர்ச்சைக்குரிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (20 டிசம்பர்) "முக்காடு, கற்புச் சட்டத்தை" நடைமுறைப்படுத்த ஈரான் திட்டமிட்டிருந்தது.
அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் (Massoud Pezeshkian) கூறினார்.
புதிய சட்டம் மறுஆய்வு செய்யப்படுவதற்கான அறிகுறியாக அது கருதப்படுகிறது.
பெண்களும் சிறுமிகளும் அவர்களின் தலைமுடி, முன்கைகள் அல்லது கால்கள் வெளியே தெரியும்படி நடந்து கொண்டால் கடுமையான தண்டனை விதிக்க புதிய உத்தேசச் சட்டம் பரிந்துரைக்கிறது.
சமூக ஆர்வலர்கள் அந்தச் சட்டத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
ஜூலையில் ஈரானில் அதிபர் தேர்தல் நடந்தது.
அதன் பிரசாரத்தின்போது ஈரானியப் பெண்களின் முக்காடு விவகாரத்தை அதிபர் பெசேஷ்கியான் கடுமையாகக் குறைகூறியிருந்தார்.
மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையீடு இருக்காது என்று அவர் உறுதியளித்திருந்தார்.
seithi
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments