சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் (Bashar al-Assad) தாம் ஒருபோதும் ரஷ்யாவுக்குத் தப்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
எட்டு நாளுக்கு முன்னர் சிரியாவிலிருந்து வெளியேறிய பிறகு முதன்முறை அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிரியாவின் புதிய தலைவர்கள் தீவிரவாதிகள் என்று திரு அசாத் கூறினார்.
தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விழுந்த பின்பு தான் நாட்டைவிட்டு வெளியேறியதாக அவர் குறிப்பிட்டார்.
சிரியாவிலிருந்து வெளியேறியது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் அவர் சொன்னார்.
சிரியா அதிபருக்குச் சொந்தமான Telegram கணக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இருந்தன.
தற்போது அந்தக் கணக்கை நிர்வகிப்பது யார், திரு அசாதே அந்தப் பதிவை வெளியிட்டாரா ஆகிய தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை.
seithi
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments