ஜப்பானில் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன மனிதக் குளியல் இயந்திரத்தை சயின்ஸ் கோ நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன மனிதக் குளியல் இயந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
ஒருவர் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்துப் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.
இயந்திரத்திலுள்ள செயற்கை நுண்ணறிவு சென்சார் ஒருவரின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய காணொலியை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது.
இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியலாக அமையும்.
இந்த அதிநவீன மனித சலவை இயந்திரம் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments