Ticker

6/recent/ticker-posts

சீனாவின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க H1B விசாவிற்கு போட்டியாக புதிய விசா அறிமுகம்


சீனா (China) புதிய கே விசாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எச்1பி விசா பெறுவதற்கு அமெரிக்கா (United States) கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை ஈர்ப்பதற்காக சீனா கே விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இந்த விசா நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் திறமையான நிபுணர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சீனா தரப்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்த முடிவு, வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வெளியேறும் விதிமுறைகளை திருத்துகின்றது.

மேலும் இது ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments