
பாலஸ்தீனத்திற்கான ஆதரவைத் தவறாக சித்தரிக்கும் முயற்சிகளை மலேசியா முழுமையாக நிராகரிக்கிறது.
வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
பாலஸ்தீன மக்களுக்கான அதன் நீண்டகால அரசியல் ஆதரவு, மனிதாபிமான முயற்சிகளை தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான எந்தவொரு தீங்கிழைக்கும் முயற்சியையும் மலேசியா கடுமையாக நிராகரிக்கிறது.
மேலும் மலேசியா தொடர்ந்து அமைதி, நீதி, ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) சாசனம், அனைத்துலக சட்டம், நாடுகளுக்கு இடையே அமைதியான சகவாழ்வு கொள்கையை மதித்து வருகிறது.
குறிப்பாக சுதந்திரம் அடைந்ததிலிருந்து மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இந்த அடிப்படைக் கொள்கை இருந்து வருகிறது.
இந்தக் கொள்கைகளுக்கு இணங்க, மலேசியா காலனித்துவம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் நிறவெறிக் கொள்கையை உறுதியாக எதிர்க்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments