Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு..!


அமெரிக்காவில் ஏழு ரிக்டர் அளவில் பயங்கர சுனாமி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக அந்த மாகாணத்தின் கவர்னர் தெரிவித்தார்.

கலிபோர்னியாவில் 5 மில்லியன் பேர் வாழ்வதாக கூறப்படும் நிலையில், இந்த சுனாமி எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க புயல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், உடனடியாக கடற்கரை பகுதிகளில் இருந்து குடியிருப்பு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சான் பிரான்சிஸ்கோ வரை உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டது முதல் ஆறு மணி நேரம் ஆகிய நிலையிலும் உடனடியாக சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இது ஒரு வலுவான நிலநடுக்கம் என்றும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் புவியியல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவில் இதே மாதிரி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பூகம்பத்தின் விளைவாக சான் பிரான்சிஸ்கோ மிருகக்காட்சி சாலையில் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

webdunia



 Ai SONGS

 



Post a Comment

0 Comments