இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற நியூசிலாந்து, மெளன்ட் மகட்டரேயில் இன்று (30) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் சரித் அசலங்க தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, மார்க் சப்மனின் 42 (29), மிற்செல் ஹேயின் ஆட்டமிழக்காத 41 (19), டிம் றொபின்சனின் 41 (34), கிளென் பிலிப்ஸின் 23 (16), டரைல் மிற்செல்லின் 18 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், வனிது ஹசரங்க 4-0-28-2, நுவான் துஷார 4-0-25-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 187 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் (2), ஜேக்கப் டஃபி (4), மிஷெல் பிறேஸ்வெல், மற் ஹென்றி (2), ஸகரி போக்ஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களையே பெற்று 45 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 48 (35), பதும் நிஸங்க 37 (28) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக ஹே தெரிவானார்.
tamilmirror
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments