Ticker

6/recent/ticker-posts

Ad Code



முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்திய பொருளாதாரத்தை மீட்ட மாமேதை


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (26ம் தேதி) அனுமதிக்கப்பட்டார். 92 வயதான சிங், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

டெல்லி எஸ்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரவு 9.50 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக இரு முறை பணியாற்றிய டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர்.

2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவர் தான் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர்.

இந்தியாவில் அதிக வருடங்கள் பிரதமராகப் பதவி வகித்தவரில், நான்காவது இடத்தைப் பிடித்தவர். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

செப்டம்பர் 26, 1932 இல், மேற்கு பஞ்சாபில் உள்ள காஹ் கிராமத்தில் பிறந்தவர் மன்மோகன் சிங். தற்போது காஹ் கிராமம் பாகிஸ்தானில் உள்ளது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

1971 இல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகத் தொடங்கிய மன்மோகன் சிங், 1972 இல், நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில் அவர், 1976 வரை இருந்தார்.

பிறகு 1976 மற்றும் 1980 க்கு இடையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI), தொழில்துறை மேம்பாட்டு வங்கியின் இயக்குநர், மணிலாவில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர்கள் குழுவில் இந்தியாவிற்கான மாற்று ஆளுநர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட பல முக்கியப் பாத்திரங்களில் சிங் பணியாற்றினார்.

இரு முறை பிரதமர், பல்வேறு துறையில் உயர் பதவி என எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும், 1991ல் இவர் நிதி அமைச்சராக இருந்ததே காலம் பெரிதும் பேசப்படும். 1990ல் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களே அதிகம் கவனிக்கப்பட்டுவருகிறது.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments