Ticker

6/recent/ticker-posts

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கையில் கருப்பு பட்டையுடன் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி – காரணம் இதோ


இந்திய அணிக்கு எதிராக அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று டிசம்பர் 6-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

அந்த வகையில் முதல் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 23 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்த விடயம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள வேளையில் அந்த கருப்பு பட்டைக்கான காரணம்? என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த போட்டிக்கு முன்னதாகவே ஒளிபரப்பப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் :

ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான ஃபில் ஹுகஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2014-ல் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து தாக்கி மைதானத்திலே சரிந்து விழுந்து மரணம் அடைந்திருந்தார். அது குறித்த தகவல்கள் காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளையில் அவரது நினைவாகவே ஆஸ்திரேலியா வீரர்கள் தற்போது கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஏற்கனவே பில் ஹுகஸ் மறைவை ஒட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் அவருக்கு மைதானத்திலேயே நினைவஞ்சலி செய்துள்ள வேளையில் தற்போது அவர் மறைந்து 10 ஆண்டுகள் ஆனதை ஒரு கருப்பு நாளாக கருதி ஆஸ்திரேலியா அணி இந்த மரியாதை அவருக்கு செய்துள்ளதுள்ளனர்.

மறைந்த ஃபில் ஹுகஸ் ஆஸ்திரேலியா அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி20 போட்டி என மூன்று வகையான சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.


crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments