செயற்கை முறையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதிக்கு செயற்கை முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர். கருவுறுதலுக்கு உதவிய மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு ஜேன் மற்றும் ஜான் ரோ என்ற தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை பிறக்காததால், அவர்கள் 1983 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பிரபல, செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் ஹால் சி டேஞ்சரை அணுகினர்.
மூன்று முறை முயற்சி செய்தும் கர்ப்பம் தரிக்கவில்லை. இதற்குப் பிறகு ஒரு அதிசயம் நடந்தது. ஏப்ரல் 1984 இல், அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இருப்பினும், 2 குழந்தைகளில் ஒன்று மட்டுமே உயிர் பிழைத்தது. இதற்குப் பிறகு, தம்பதியரின் குழந்தை மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது. தம்பதியினர் மீண்டும் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர். இதன் காரணமாக, ஜேன் கர்ப்பமாகி, ஜூன் 1986 இல் மீண்டும் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தனது பூர்வீகம் குறித்து அறிய அந்த குழந்தைகளில் ஒருவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டிஎன்ஏ சோதனை செய்தார். இதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது பிறந்த குழந்தைகளின் தாயுடைய டிஎன்ஏவும் மட்டுமே ஒத்துப் போய் உள்ளது.
தந்தையின் டி.என்.ஏ இணையாததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவர் தனது விந்தணுவை செலுத்தி செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மருத்துவர் மீது பலாத்கார வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். பிறரின் அனுமதியின்றி தனது விந்தணுவை பயன்படுத்தி குழந்தையை பெற்றுக் கொள்ள மருத்துவர் உதவிய சம்பவம் சம்பத்தப்பட்ட குடும்பத்தினர் மத்தியில் மனரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
news18
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments