Ticker

6/recent/ticker-posts

"உக்ரேன் போரைப் பிரிட்டன் சந்தித்தால் பிரிட்டிஷ் ராணுவம் ஆறே மாதத்தில் காணாமல் போய்விடும்"


உக்ரேனில் நடப்பது போன்ற ஒரு போரைச் சந்திக்க நேர்ந்தால் பிரிட்டிஷ் ராணுவம் ஆறே மாதத்தில் காணாமல் போய்விடும் என்று அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் அலிஸ்டெர் கான்ஸ் (Alistair Carns), நெருக்கடியைச் சந்திப்பதற்கு ராணுவம் தயாராக வேண்டும் என்றார்.

லண்டனில் அவர் ஆற்றிய உரையின் விவரத்தை Sky News வெளியிட்டது.

அதிகாரத்துவ தகவலின்படி பிரிட்டிஷ் ராணுவத்தில் நூற்றுப் பத்தாயிரம் பேர் உள்ளனர்.

பிரிட்டிஷ்படை கடந்த பதினாலாண்டாகத் தொடர்ந்து சுருங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப், உக்ரேனுக்கு ராணுவ, பண உதவியையும் நிறுத்தப் போவதாகக்கூறியிருக்கிறார்.

பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் அந்த இடத்தை நிரப்ப வேண்டி வரலாம்.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments