ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்திகா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலிபான்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் மூலம் புதன்கிழமை நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் முர்க் பஜார் என்ற கிராமம் முற்றிலும் அழிந்துள்ளதாக தெரிகிறது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments