Ticker

6/recent/ticker-posts

Ad Code



இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களுக்கு தடை: தெலங்கானா உயர் நீதிமன்றம்


இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிக்கெட் விலை தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விஜய் கோபால் வழக்கு தொடுத்தார்.

அதில், இரவு 1.30 மணி வரை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதைக் காண செல்லும் சிறுவர்களின் உடல்நிலையிலும், மனநிலையிலும் எதிர்மறைவு விளைவுகள் ஏற்படுத்துகின்றன என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், திரையரங்குகள், மல்ட்டி பிளெக்ஸ்களில் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்குப் பிறகும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வருவதை ஒழுங்குபடுத்துவது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து, அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

அதுவரை இரவு 11 மணிக்குப் பிறகு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்மையில் புஷ்பா 2 திரைப்படத்தை காண சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தி்ல் உயிரிழந்த தாயுடன் இருந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

nambikkai


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments