Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருதப்"பா"வரங்கம்-13



இலக்கியக்  கரையோரம்!
   (ஓவியக்கலை)

(நேரிசை வெண்பா)

ஆர்த்திடும் சிற்ப அழகியல் தந்தவன்
நேர்த்தியே
"விஸ்வகர் மா"நேரில்--

பார்த்திடும்

பாவம் அழைக்கப் பனிக்குழை ஓவியம்
தூவ"ரவிவர்மா"
தேர்ந்து:

காவியம் பாடும் கலைகளில் மேலென
பாவியல் கூறிடும் பண்ணமைத்தே--

ஆவலில்

பேசிடும் வார்த்தை புரிந்திடச் செய்தது
மாசிலா ஓவிய மாண்பு:

மலையினைத் தூர்ந்து மதித்திடும் போக்கில்
விலையில் படைத்தார் விருந்து--

கலையாத

வண்ணம் நிறைத்து வடித்தார் அழகுடன்
எண்ணிலா ஓவியம் ஓர்:

மன்னர்கள் போற்றி மகிழ்ந்து நிறைந்திட
பொன்னைக் குவிப்பார் புதுமையென--

ஒன்றிப்

படைத்திடும் ஓவியம் பல்கலைக் கல்வி
முடித்திடத் தோன்றும் முனைந்து:

அறிவியல் கூறும் அழகினில் முந்தும்
பொறியியல் காட்டும் புதுமை--

செறிவுடன்

கோடுகள் போடக் குறிப்புகள் தந்திடும்
ஏடெனும்"ஓவியம்"
ஏற்பு:

கவிஞர் புலமைப்பித்தன்
 "நிரைநேர் புலமை நிறைவு"

(நேரிசை வெண்பா)

கொங்குத் தமிழன்தான் கோலோச்சி நின்றவன்தான்
எங்குமே"எம்ஜியார்" ஏற்றவன்தான்--

மங்காத்

திரைத்துறை வென்றிடத் தேன்தமிழ் உண்டான்
நிரைநேர்"புலமை" நிறைவு:


(தொடரும்)


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments