Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒரு சிகரெட் புகைத்தால் ஆயுளில் 20 நிமிடங்கள் குறையும்: லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல்


ஒரு சிகரெட்  புகைத்தால் சராசரியாக ஒருவரின் ஆயுளில் 20 நிமிடங்கள் குறையும் என்று லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 

மேலும்,  ஒரு பெட்டியிலிருக்கும் 20 சிகரெட் துண்டுகளைப் புகைத்தால் ஒருவரின் ஆயுளில் 7 மணிநேரம் குறையும்.

ஒரு நாளில் 10 சிகரெட்டைப் புகைக்கும் ஒருவர் ஜனவரி முதல் தேதி அப்பழக்கத்தைக் கைவிட்டால் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் ஒரு நாள் ஆயுளைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பிப்ரவரி ஆம் தேதி வரை அவ்வாறு செய்தால் ஒரு வார ஆயுளைக் காப்பாற்றலாம்.

புத்தாண்டு தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை அது நீடித்தால் ஒரு மாதக் கால ஆயுளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆண்டிறுதியில் ஆயுளில் 50 நாள்கள் குறைவதைத் தடுக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.

மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான சிகரெட் புகைக்கும் பழக்கும் தவிர்க்கப்படக்கூடிய ஒன்றே என ஆய்வு கூறுகின்றது.

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments