Ticker

6/recent/ticker-posts

Ad Code

டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லா கார்; பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்: எலன் மஸ்க்


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹோட்டல் முன்பு, டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் டொனால்டு டிரம்ப் ஹோட்டல் முன்பு டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியது. 

இதில் தீயில் கருகி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

ஹோட்டல் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லாவின் சைபர் டிரக் திடீரென வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் லான் மஸ்க் சந்தேகப்படுகிறார். 

இது குறித்து டெஸ்லாவின் உயர் அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெருவில் அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். 

இது பயங்கரவாத தாக்குதல் என விசாரணையில் தெரியவந்தது.

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments